×

சந்திராயன்-5 ஆய்வு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

சென்னை: குலசேகரப்பட்டினம் விண்வெளி ஏவுதளம் இன்னும் 2 ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் நாராயணனுக்கு, சென்னை அரும்பாக்கம் டி.ஜி., வைஷ்ணவா கல்லுாரியில் நேற்று பாராட்டு விழா நடந்தது. அந்த பாராட்டு விழாவில் பேசிய அவர்;

தன்னை சந்திக்கும் போதெல்லாம் குலசை ஏவுதளம் குறித்து பிரதமர் மோடி கேட்பதாகவும் கூறினார். ஜப்பானும், இந்தியாவும் இணைத்து சந்திராயன்-5ம் திட்டத்தை உருவாக்க உள்ளதாகவும், சந்திராயன்-5 ஆய்வு திட்டத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இஸ்ரோல் தலைவர் நாராயணன் தெரிவித்தார். இஸ்ரோ இதுவரை 433 வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளதாகவும், அதன்மூலம் ஒன்றிய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.30,000 கோடி வருவாய் கிடைப்பதாகவும் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும், குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் இன்னும் இரண்டும் ஆண்டுகளில் முழுமையாக செயல்படத் தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

The post சந்திராயன்-5 ஆய்வு திட்டத்திற்கு ஒன்றிய அரசு ஒப்புதல்: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,ISRO ,Narayanan ,Chennai ,Kulasekarapattinam ,Dr. ,Indian Space Research Organization ,D.G. Vaishnava College ,Arumbakkam, Chennai… ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலில்...