×

பத்ம விருதுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்

புதுடெல்லி: நாட்டின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, 2026ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரை மற்றும் விண்ணப்பிப்பதற்கான நடைமுறைகள் நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை 31ம் தேதி விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான கடைசி தேதி என அதிகாரப்பூர்வ குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பத்ம விருதுக்கு ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Padma Awards ,New Delhi ,Union Government ,Padma Vibhushan ,Padma Bhushan ,Padma Shri ,Padma ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்றத்தில் கடும் எதிர்ப்புடன்...