×

மதுரையில் ஹோலி கொண்டாட்டம்

மதுரை: ஹோலி பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தென்மாநிலங்களில் தங்கியிருக்கும் வடமாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுவதற்கு வசதியாக கன்னியாகுமரியில் இருந்து மும்பைக்கு நேற்று சிறப்பு ரயில் இயக்கப்பட்டது.

இந்நிலையில், மதுரையில் மஹால் வடம்போக்கி தெரு, மஞ்சனக்கார தெரு, விளக்குத்தூண் பகுதி மற்றும் 10 தூண் சந்து உள்ளிட்ட பல இடங்களில் வடமாநிலத்தவர் ஹோலி பண்டிகையை கொண்டாடினர். அப்போது ஒருவருக்கு ஒருவர் கலர் பொடிகளை தூவி உற்சாகமடைந்தனர்.

 

The post மதுரையில் ஹோலி கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Holi Celebration in ,Madura ,Madurai ,Holi ,Kanyakumari ,Mumbai ,Mahal Vadamboki Street ,Manjanakkara ,
× RELATED கோவை வரைவு வாக்காளர் பட்டியலில் 10...