×

அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் மீண்டும் அமல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் மீண்டும் அமல் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்று பரவி இருந்த காலத்தில் தமிழ்நாடு அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெருஞ்சுமை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு அலுவலருக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

அவற்றைக் கனிவுடன் பரிசீலித்து, முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும். இதற்குரிய அரசாணைகள் விரைவில் பிறப்பிக்கப்படும். அரசு அலுவலர் நலன் காக்கும் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் ஒன்பது இலட்சத்திற்கும் மேற்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அரசு ஊழியர்கள் 15 நாட்கள் வரை விடுப்பை சரண்டர் செய்து ஊதியம் பெறும் திட்டம் மீண்டும் அமல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Thangam Thennarasu ,Chennai ,Tamil Nadu government ,Covid pandemic… ,Dinakaran ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...