×

மேலூர் ஊராட்சியில் அரசு நிலத்தை மீட்க வலியுறுத்தல்

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான கட்டிடத்தை இடித்து வீடு கட்டி வரும் தனிநபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மேலூர் ஊராட்சி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் திருவள்ளூர் கலெக்டர் பிரதாப்பிடம் புகார் மனு அளித்தனர். மனுவில், மீஞ்சூர் ஒன்றியம் மேலூர் ஊராட்சி சீமாபுரம் செல்லும் வண்டிபாட்டை பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் குப்புசாமி மூலம் அரசு நிதியில் இருந்து மண்புழு கிடங்கு அமைக்கப்பட்டது.

இந்நிலையில், மேலூர் ஜோசப் தெருவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம் மண்புழு கிடங்கு கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டி வருகிறார். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மேலும், அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ள தனிநபருக்கு வருவாய்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். எனவே, ஆக்கிரமிப்பு நிலம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும். தனிநபர் கட்டி வரும் வீட்டை அகற்றி அரசு நிலத்தை மீட்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.

The post மேலூர் ஊராட்சியில் அரசு நிலத்தை மீட்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Melur Panchayat ,Ponneri ,Meenjur Union Melur Panchayat ,Thiruvallur Collector Prathap ,Meenjur… ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...