- பெத்திகுபம் ஒரட்சீ
- Kummidipundi
- பெத்திகுபம் ஊராட்சி
- பெத்திகுப்பம் ஓராட்சி
- சமிரெட்டி
- காண்டிகை
- முனுசாமி
- பெத்திகுபம் ஒரட்சி
- தின மலர்
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடங்களை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். இதில் 7 கடைகள் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட சாமிரெட்டி கண்டிகை, முனுசாமி நகர், பூபாலன் நகர், சிவனேசன் காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை ஒட்டி கும்மிடிப்பூண்டி பேரூராட்சி உள்ளது.
பேரூராட்சிக்கும்-பெத்திகுப்பம் ஊராட்சிக்கும் உட்பட்ட பகுதியில் சுமார் 80 ஏக்கர் பரப்பளவு கொண்ட பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான தாமரை ஏரியும், அதை ஒட்டியே சிறிய ஏரியும் உள்ளது. அந்த ஏரிக்கரை ஓரமாக மழைநீர் வெளியேற்றும் பகுதியில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் மற்றும் 7க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள முன்னாள் பாமக மாவட்டச் செயலாளர் ரமேஷ் என்பருக்குச் சொந்தமான கடை மற்றும் ஆதிதிராவிடர் சமுதாயத்தினருக்குச் சொந்தமான பல்வேறு கடைகளை அகற்ற வேண்டுமென கலெக்டர் பிரதாப்புக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்த கோரிக்கை சம்பந்தப்பட்ட வருவாய்த்துறை, பொதுப்பணித்துறைக்கு புகார் கடிதமாக அனுப்பப்பட்டது. அதன்பேரில் இரண்டு துறை அதிகாரிகளும் கலந்து ஆலோசித்து முதலில் கடைகளை மட்டும் எடுக்க 15 நாள் கால அவகாசம் கொடுக்கப்பட்டு, ஏழு கடைகளுக்கும் நோட்டீஸ் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அந்த கால அவகாசம் நேற்று முன்தினம் முடிவுற்றது. இதை அறிந்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், டிஎஸ்பி ஜெயஸ்ரீ மற்றும் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட போலீசாருடன் நேற்று ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்க முற்பட்டனர்.
அப்போது பாமக பிரமுகர் ரமேஷ், கிராம நத்தம் பட்டா என்னிடம் 2023 வரை உள்ளதாகவும், இது சம்பந்தமாக வழக்கு உள்ளதாகவும் அதிகாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு, தாசில்தார் ராஜேந்திரன் வருவாய்த்துறை அதிகாரிகள் பணத்தைப்பெற்றுக் கொண்டு போலியாக பட்டா கொடுத்துள்ளதாக அவரிடம் கூறினார். எனவே, அதை நாங்கள் ரத்து செய்து விட்டோம் என கூறிய பின்னர், பொக்லைன் இயந்திரங்கள் மூலம் ரூ.2 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு கடைகளை இடித்தனர்.
அப்போது அருகே இருந்த சின்னச்சின்ன கடைகளை இடிக்க முற்பட்டபோது விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக போலீசிடம் பேசி, கடை உரிமையாளர்களே கடையை அப்புறப்படுத்தினர். இதில் மொத்தம் 7 கடைகள் இடித்து அகற்றப்பட்டன. மேலும் குடியிருப்புகள் இருக்கும் இடத்தை முறையாக கணக்கீடு செய்து அவர்களுக்கு மாற்றிடம் வழங்கிய பின்னர் வீடுகளை எடுக்க நோட்டீஸ் கொடுக்க வேண்டுமென டிஎஸ்பி ஜெயஸ்ரீ உத்தரவிட்டார். இந்த சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியது.
* பொதுமக்கள் குற்றச்சாட்டு
இதுகுறித்து, பொதுமக்கள் கூறுகையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு பெரிய ஒபுளாபுரம் ஊராட்சி, நாகராஜ் கண்டிகையில் உள்ள பிரபல எம்டிசி இரும்பு உருக்காலையில் நீர் நிலை ஆக்கிரமிப்பு இருப்பதாக கூறி வட்டாட்சியர் சரவணக்குமாரி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து அதை அகற்ற முற்பட்டனர். அதற்கு நிர்வாகம் கால அவகாசம் வேண்டும் என கூறிய பின்னர் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.
ஆனால் அதே பகுதியில் குடியிருப்புகளை மட்டும் இடித்துவிட்டுச் சென்றது நியாயம் இல்லை. தொழிற்சாலையிடம் இருந்து கணிசமான தொகையை அதிகாரிகள் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சாதகமாக செயல்படுகின்றனர். இதனை கண்டறிந்து திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
The post கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திகுப்பம் ஊராட்சியில் ரூ.2 கோடி மதிப்பிலான நீர்நிலை ஆக்கிரமிப்பு இடம் மீட்பு: 7 கடைகள் இடித்து அகற்றம், அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.
