×

சோகண்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.74.5 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம்: திருப்போரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அடுத்த சோகண்டி கிராமத்தில் அரசினர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு, கூடுதல் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜியிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். இக்கோரிக்கையை ஏற்று, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.74.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, சோகண்டி கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு 4 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

சோகண்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி கலந்துகொண்டு, ரூ.74.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய பள்ளிக் கட்டிடத்தை ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், கலாம் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் ஸ்ரீராம், மாவட்ட கவுன்சிலர் ஆர்.கே.ரமேஷ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் செல்வக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மீனாட்சி, பாஸ்கரன், விசிக ஒன்றிய செயலாளர் திருமணி சதீஸ், நகர செயலாளர் செந்தில், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post சோகண்டி அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.74.5 லட்சத்தில் கூடுதல் பள்ளி கட்டிடம்: திருப்போரூர் எம்எல்ஏ திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Additional ,School Building ,Sokandi Government High School ,Thiruporur MLA ,Thirukkaskulram ,King's High School ,Sokandi ,Trincomalee ,Tiruporur MLA ,Balaji ,Assembly Constituency Development Fund ,Additional School Building for Sokandi Government High School ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...