×

சிறப்பாக பணியாற்றிய 33 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ்

 

அரியலூர், மார்ச் 13: அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் நேற்று அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் வாகனங்களை ஆய்வு செய்தார். தொடர்ந்து நடைபெற்ற மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டத்தில் அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் முத்தமிழ்செல்வன் மற்றும் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

இக்கூட்டத்தில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் உட்கோட்டம் மற்றும் சிறப்பு பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர்கள்,காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். அரியலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குற்ற வழக்குகள், வழக்குகளின் நிலை குறித்தும், புலன் விசாரணையில் உள்ளவழக்கு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆலோசனை வழங்கினார்.

அதன் பின்னர் அரியலூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த 33 காவல்துறையினருக்கு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகையை திருடிய குற்ற வழக்கில் குற்றவாளிகளை நான்கு நாட்களில் கைது செய்து 38 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சீராளன் தலைமையிலான, காவல் ஆய்வாளர் வேலுச்சாமி , காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜவேல், சரவணன் , பழனிவேல், மோகன்(சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்) மற்றும் உடன் பணியாற்றிய காவலர்கள் அனைவருக்கும் அவர்களின் மெச்சத் தகுந்த பணியினை நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .

ஜெயங்கொண்டம் அருகே 151 கிலோ குட்கா பொருட்களை காரின் மூலம் கடத்திச் செல்ல முயன்ற நபர்களை கைது செய்து,குட்கா மற்றும் காரை பறிமுதல் செய்த காவல் உதவி ஆய்வாளர் நந்தகுமார் மற்றும் உடன் பணிபுரிந்த காவல்ஆளிநர்களின் மெச்சத் தகுந்த பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதே போல பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார் .

The post சிறப்பாக பணியாற்றிய 33 காவல் துறையினருக்கு பாராட்டு சான்றிதழ் appeared first on Dinakaran.

Tags : ARIYALUR ,ARYALUR DISTRICT POLICE SUPERINTENDENT DR. ,Deepak Sivach ,District Police Office of the Superintendent of Police ,Departments ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் வாகனங்கள் ஏலம்