×

மக்கள் தொகையின்படி தான் தொகுதி சீரமைப்பு என ஒன்றிய அரசு முடிவெடுத்தால் அதை தமிழ்நாடு எதிர்க்கும்: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு

சென்னை: சென்னை, மாதவரம் பஜார் ரோட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பேசியதாவது: நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாக செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. ஒன்றிய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டை புறக்கணித்தும் வஞ்சித்தும் வருகிறது. தேசியக் கல்வி கொள்கை, மும்மொழி கொள்கை என்ற பெயரில் 3,5 மற்றும் 8ம் வகுப்பிற்கும் மற்றும் இளங்கலை பட்டப்படிப்புக்கே நுழைவு தேர்வு மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்து கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறது.

பாஜ கட்சியினர் மாணவர்களிடம் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு கோரி கையெழுத்து இயக்கம் நடத்தி வருகின்றனர். மாணவர்களிடம் மிட்டாய் கொடுத்து கையெழுத்து வாங்கும் உங்களை பூச்சாண்டிகளாக தான் பார்ப்போம். நாங்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினால் தாங்க மாட்டீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். மக்கள் தொகையின்படி தான் சீரமைப்பு செய்ய முடியும் என மூர்க்கத்தனமாக ஒன்றிய பாஜ அரசு முடிவுக்கு வந்தால், அதனை எதிர்க்க தமிழ்நாடு தீரத்துடன் போராடும். இவ்வாறு அவர் கூறினார்.

The post மக்கள் தொகையின்படி தான் தொகுதி சீரமைப்பு என ஒன்றிய அரசு முடிவெடுத்தால் அதை தமிழ்நாடு எதிர்க்கும்: அமைச்சர் கோவி.செழியன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Union Government ,Minister ,Kovi ,Chezhiyan ,Chennai ,Madhavaram Bazaar Road, Chennai ,Higher ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...