திருச்சி, மார்ச் 12: திருச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையில், கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை மார்ச் 19ம் தேதி பொது ஏலம் விடப்படுகிறது. திருச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையில், கழிவு செய்யப்பட்ட காவல் வாகனங்களை மார்ச் 19ம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது என்று மாவட்ட எஸ்பி ராஜன் உத்தரவிட்டுள்ளார். ஏலமானது இருப்புப்பாதை மாவட்ட காவல் அலுவலகம் கிராப்பட்டியில் காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.
ஏலத்திற்கு உண்டான காவல் வாகனங்கள் காவல் அலுவலக வளாகத்தில் மார்ச் 17ம் தேதி காலை 10 மணிமுதல் ஏலம் நடைபெறும். ஏலம் எடுக்க விருப்புவோர் மார்ச் 19 ம் தேதி காலை 7 மணிமுதல் 10 மணி வரை ரூ..1000 முன்வைப்பு தொகையினை செலுத்தி ஏலம் எடுக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.மேலும் ஏலம் எடுத்தவர்கள் ஏலத்தொகையுடன் ஏலத்தொகைக்கு உண்டாந GST விற்பனை வரியுடன் சேர்த்து ஏலம் முடிவடைந்த பின்னர் உடனே செலுத்த வேண்டும். ஏலம் எடுக்க வருவோர் அவசியம் ஆதார் கார்டு நகல் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
The post திருச்சி ரயில்வே இருப்புப்பாதை காவல் துறையில் கழிவு செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம் appeared first on Dinakaran.
