×

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நாளை பொங்கல் வழிபாடு

திருவனந்தபுரம்: பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம்தோறும் மாசி மாதத்தில் 10 நாள் பொங்கல் திருவிழா நடைபெறும். திருவிழாவின் 9ம் நாளன்று நடைபெறும் லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொள்ளும் பொங்கல் வழிபாடு உலகப் பிரசித்தி பெற்றதாகும். இவ்வருட பொங்கல் திருவிழா கடந்த 5ம் தேதி தொடங்கியது.

இதை முன்னிட்டு கோயிலில் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு நாளை (13ம் தேதி) நடைபெறுகிறது. பொங்கலிட்டு அம்மனை வழிபடுவதற்காக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், தமிழ்நாட்டிலிருந்தும் பெண்கள் திருவனந்தபுரத்தில் குவிந்து கொண்டிருக்கின்றனர். இதனால் திருவனந்தபுரம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

 

The post ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் நாளை பொங்கல் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Attukal Bhagavathy Amman Temple ,Thiruvananthapuram ,Pongal festival ,Pongal worship ,Pongal ,
× RELATED 49வது புத்தகக்காட்சியை சென்னை...