×

சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம்

கோவை, மார்ச் 12: கோவை பீளமேட்டில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மைகக் கல்லூரியில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. கல்லூரியின் இயக்குனர் அல்லி ராணி தலைமை தாங்கி பாலின சமத்துவத்தின் முக்கியத்துவத்தையும், முற்போக்கான சமூகத்தை வடிவமைப்பதில் பெண்களின் பங்கையும் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ரிப்ளெக்ட் ஸ்கின் கிளினிக்கின் தோல் மருத்துவர் கிருஷ்ணா மீரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தோல் மற்றும் முடி ஆரோக்கியம் என்ற தலைப்பில் பேசினார். தொடர்ந்து மகளிர் தினத்தையொட்டி பல்வேறு போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நடன நிகழ்ச்சியும் நடந்தது.

The post சர்தார் வல்லபாய் படேல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தின கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : International Women's Day ,Sardar Vallabhbhai Patel College ,Coimbatore ,Sardar Vallabhbhai Patel International College of Textiles and Management ,Peelamedu, Coimbatore ,Alli Rani ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது