×

மல்யுத்த கூட்டமைப்பு மீதான இடைக்கால தடை நீக்கம்

புதுடெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் மீது விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நீக்கியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் (டபிள்யுஎப்ஐ) தலைவராக இருந்த பாஜ முன்னாள் எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது பாலியல் புகார்கள் எழுந்ததை அடுத்து, புதிய தலைவராக, பிரிஜ் பூஷணுக்கு நெருக்கமான சஞ்சய் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

அவர் தலைவர் பொறுப்பேற்றதும், பிரிஜ் பூஷணுக்கு செல்வாக்குள்ள கோண்டா நகரில் மல்யுத்த போட்டிகள் நடத்தப் போவதாக அறிவித்தார். அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால், மல்யுத்த கூட்டமைப்புக்கு கடந்த 2023ல் தடை விதிக்கப்பட்டது. அதனால் மல்யுத்தம் தொடர்பான போட்டிகளில் சுணக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு மீதான இடைக்கால தடையை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நீக்கியுள்ளது.

The post மல்யுத்த கூட்டமைப்பு மீதான இடைக்கால தடை நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Wrestling Federation ,New Delhi ,Union Sports Ministry ,Wrestling Federation of India ,WFI ,BJP ,Brij Bhushan Charan Singh ,Dinakaran ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்