- மகா கும்பாபிஷேகம்
- வலம்சுழி நவசக்தி விநாயகர்
- கோவில்
- ஆதிபராஷக்தி
- மதுராந்தகம்
- வலம்சுழி நவசக்தி விநாயகர் கோவில்
- அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
- ஸ்ரீ வலம்சுழி நவசக்தி விநாயகர் ஆலயம்
- கேசவராயன்பேட்டை
- செங்கல்பட்டு
- மேல்மருவத்தூர்…
- மகா
- Kumbabhishekam
- வலம்சுழி
- நவசக்தி விநாயகர் கோயில்.
- தின மலர்
மதுராந்தகம்: வலம்சுழி நவசக்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கேசவராயன்பேட்டை கிராமத்தில் ஸ்ரீ வலம்சுழி நவசக்தி விநாயகர் கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நேற்று சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன் தலைமையில் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இதில் கேசவராயப்பேட்டை, மேல்மருவத்தூர், அச்சிறுப்பாக்கம், சோத்துப்பாக்கம், மதுராந்தகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம விழா குழுவினர் செய்திருந்தனர்.
The post வலம்சுழி நவசக்தி விநாயகர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்: ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.
