×

மார்ச் 12ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் நடக்க உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் 12ம் தேதி (புதன்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். இதனை ஈடுகட்ட வரும் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்

மாசிமகத்தை யொட்டி கும்பகோணம் மகாமக குளத்தில் தீர்த்தவாரி மார்ச் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிகாலை முதல் மாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடுவார்கள். கும்பகோணத்தில் 12 சிவன் கோயில்கள் மற்றும் 5 பெருமாள் கோயில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும்.

நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 5 சிவன் கோயில்களில் மாசி மக விழா ஏக தின உற்சவமாக நடைபெறும். முக்கிய வைபவமான மாசி மக தீர்த்தவாரி மகா மகக் குளக்கரையில் நடைபெறவுள்ளது. இதில், 10 கோயில்களிலிருந்து பஞ்சமூர்த்திகளுடன் சுவாமிகள் எழுந்தருளி, பிற்பகல் 12.30 மணியளவில் தீர்த்தவாரி நடைபெறும். இதனையொட்டி மார்ச் 12ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார்.

The post மார்ச் 12ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : District ,Governor ,Thanjavur district ,Kumbakonam ,Masi Maga Tirthwari ,Kumbakonam Mahamaka Pond ,Ruler ,Dinakaran ,
× RELATED சென்னை எழும்பூர்-தென்காசி இடையே...