×

போக்சோவில் 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு

 

ஈரோடு, மார்ச் 10: தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த கோபால் மகன் சத்திய ராஜ் (19). கட்டிட தொழிலாளி. சிவகிரியில் கட்டிட வேலை செய்கிறார். பிளஸ் 1 படிக்கும் 17 வயது சிறுமியிடம் பழகி திருமணம் செய்துள்ளார். சிறுமி கர்ப்பமானார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் குழந்தை திருமண தடை சட்டம், போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் சத்தியராஜ் மீது சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

திங்களூர் கிரே நகர் சி.எஸ்.ஐ. வீதியை சேர்ந்த பாபு மகன் சஜி (22). ஈரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில் எம்.காம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 17 வயது கல்லுாரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.  மாணவி அளித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

 

The post போக்சோவில் 2 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Sathya Raj ,Gopal ,Pennagaram, Dharmapuri district ,Sivagiri ,
× RELATED போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது