×

ஆயத்த பணிகளை முடித்த கர்நாடகா மேகதாது அணை அமைப்பதற்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாககர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா அறிவித்திருக்கிறார். காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும் கடைமடை பாசன மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதல் இன்றி மேகதாது அணையை கட்ட முடியாது.

மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018ம் ஆண்டில் ஒன்றிய அரசு அளித்த அனுமதியை ரத்து செய்வது தான் மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் திட்டத்தை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழியாகும். அதை ஒன்றிய அரசு உடனடியாக செய்வதுடன், மேகதாது அணை குறித்த எந்த பணியையும் மேற்கொள்ளக்கூடாது என்று கர்நாடக அரசை எச்சரிக்க வேண்டும்.
இன்னொருபுறம் மேகதாது அணைத் திட்டத்தைக் கைவிடுவதாக கர்நாடக அரசு அறிவிக்கும் வரை அம்மாநில அரசுடன் எந்த விதமான உறவையும், ஒத்துழைப்பையும் தமிழக அரசு வைத்துக் கொள்ளக் கூடாது.

மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை குறித்து விவாதிக்க வரும் 22ம் தேதி சென்னையில் தமிழக அரசு கூட்டியுள்ள 7 மாநில முதலமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்க கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யாவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post ஆயத்த பணிகளை முடித்த கர்நாடகா மேகதாது அணை அமைப்பதற்கான அனுமதியை ரத்துசெய்ய வேண்டும்: ஒன்றிய அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Megedatu Dam ,Ramadoss ,Union Government ,Chennai ,PMK ,Chief Minister ,Siddaramaiah ,Cauvery ,Cauvery Tribunal ,Supreme Court ,Kadayamadai ,Tamil Nadu… ,Dinakaran ,
× RELATED சட்டவிரோத குவாரி மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?: ஐகோர்ட் கிளை கேள்வி