- புலியங்குடி அரசு ஆண்கள் பள்ளி
- புளியங்குடி
- மாநில ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- புயலங்குடி அரசு ஆண்கள் பள்ளி
- தின மலர்
*இளைஞர்கள் எதிர்பார்ப்பு
புளியங்குடி : புளியங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்தபடி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன விளையாட்டு மைதானங்கள் இல்லை.
இதனால் இளைஞர்கள் குளத்து பகுதி, வயல்வெளிகள், தனியார் இடங்களில் விளையாடி வருகின்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு சிறு விளையாட்டரங்கம் என்ற திட்டத்தின் கீழ் புளியங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் தேர்வு செய்யப்பட்டது.
இதில் ரூ.3 கோடி மதிப்பில் 400 மீ தடகள ஓடுதல் பாதை, கால்பந்து மைதானம், கூடைப்பந்து மைதானம், கபடி மைதானம், கோ-கோ, வாலிபால் ஆகிய விளையாட்டு மைதானங்களும், அலுவலக அறை, கேலரி, விளையாட்டு உபகரணங்கள் அறை, உடைமாற்றும் வசதியுடன் கூடிய கழிவறை ஆகிய வசதிகளுடன் கூடிய சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் எனவும், இதனை பள்ளி மாணவ, மாணவிகள், வீரர், வீராங்கனைகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கான கருத்துரு மாவட்ட கலெக்டரால் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் நிதி பற்றாக்குறையினால் இதுவரை அரங்கம் அமைக்கும் பணி நடைபெறவில்லை. எந்தவித அடிப்படை வசதிகளோ, வேலை வாய்ப்பு இல்லாத புளியங்குடி போன்ற நகராட்சி பகுதிகளில் இளைஞர்கள் போதை பழக்கம், கேளிக்கை நிகழ்ச்சிகள், செல்போன் பயன்பாட்டில் மூழ்குவதுமாக தங்களது வாழ்க்கையை தொலைத்து வருகின்றனர்.
எனவே, இளைஞர்கள் கவனத்தை திசை திருப்ப இதுபோன்ற விளையாட்டு அரங்கங்கள் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே தமிழக அரசு விரைவில் நிதி ஒதுக்கி இதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என்று இளைஞர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post புளியங்குடி அரசு ஆண்கள் பள்ளியில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படுமா? appeared first on Dinakaran.
