×

திருச்சி கோளரங்கத்தில் இன்று தொலைநோக்கியில் வான்நோக்கு நிகழ்ச்சி

 

திருச்சி, மார்ச் 8: திருச்சி அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் இன்று தொலைநோக்கி மூலம் வான்நோக்கு நிகழ்ச்சி காண பொதுமக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி புதுக்கோட்டை சாலை விமான நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணா அறிவியல் மையம் கோளரங்கத்தில் இன்று (8ம் தேதி) மாலை 6.30 மணி முதல் இரவு 8:30 மணி வரை தொலைநோக்கி மூலம் வான்நோக்குதல் நிகழ்ச்சி காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று வானம் தெளிவாக இருக்கும் நிலையில் பொதுமக்கள் இந்த அற்புத வான் நிகழ்வை அண்ணா அறிவியல் மையம் கோளரங்கம் வந்து பார்த்து பயன்பெறலாம் என அண்ணா அறிவியல் மைய திட்ட இயக்குனர் அகிலன் தெரிவித்துள்ளார்.

The post திருச்சி கோளரங்கத்தில் இன்று தொலைநோக்கியில் வான்நோக்கு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Trichy Planetarium ,Trichy ,Trichy Anna Science Centre Planetarium ,Anna Science Centre Planetarium ,Pudukkottai Road Airport ,Trichy… ,Dinakaran ,
× RELATED லாட்டரி விற்றவர் கைது