×

பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

தொண்டி, மார்ச் 8: தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் (பொ) ரமேஷ் தலைமை வகித்தார். எஸ்எம்சி தலைவி பாண்டிச் செல்வி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் மலை ராஜ் வரவேற்றார். மாணவர் சேர்க்கையை அதிகரிப்பது, ஆண்டு விழா நடத்துவது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு குறித்து எடுத்துறைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணன், துணைத் தலைவர் ரபிக் ராஜா, எஸ்எம்சி உறுப்பினர்கள் வெற்றிவேலன், இபுராகிம், பாண்டியராஜ், வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை அகிலா ராணி நன்றி கூறினார்.

The post பள்ளி மேலாண்மை குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : School Management Committee Meeting ,Thondi ,Nambudalai Government High ,School ,Headmaster ,P) Ramesh ,SMC ,Pandi Selvi Arumugam ,Teacher ,Malai… ,Dinakaran ,
× RELATED கணவனுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு...