×

தூத்துக்குடியில் தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார். தூத்துக்குடி எட்டயபுரம் பகுதி அருகே உள்ள மேலநம்பிபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் சீதாலட்சுமி, ராமஜெயந்தி. இருவரும் தனியாக ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். சீதாலட்சுமியின் கணவர் சமீப காலத்திற்கு முன்பு இறந்து விட அவரது மகள் ராமஜெயந்தி கணவரை பிரிந்து இருவரும் தனியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இதை அறிந்த மர்மநபர்கள் அவர்களை நோட்டமிட்டு கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த இருவரின் கழுத்தில் இருந்த நகைகள், காதில் இருந்த கம்மல் போன்றவற்றை பறித்துவிட்டு தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து தப்பி உள்ளனர். இதனை அடுத்து வீடு திறக்காமல் இருந்துள்ளது. வீடு திறக்கவில்லை என்பதை அறிந்த அக்கம், பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்து வந்த எட்டயபுரம் காவல்துறையினர் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வீட்டை திறந்து பார்த்தபோது இருவரும் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனை அடுத்து, காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். திருட்டில் ஈடுபட்டவர்கள் யாரென்று தெரியாத நிலையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் முனீஸ்வரன் என்பவர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கண்டறியப்பட்டார். முனீஸ்வரனை காவல் உதவியாளர் முத்துராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் பிடிக்க முயன்றனர். அப்போது காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்ற முனீஸ்வரனை போலீசார் காலில் சுட்டு பிடித்தனர். காயமடைந்த காலர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுடப்பட்ட முனீஸ்வரனும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட உள்ளார்.

The post தூத்துக்குடியில் தாய், மகள் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவர் துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thoothukudi ,Seethalakshmi ,Ramajayanthi ,Melanambipuram ,Ettayapuram ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...