- மெக்சிகோ ஓபன் டென்னிஸ்
- டேவிட்டோவிச்,
- மெகாக்
- அகாபுல்கோ
- ஸ்பெயின்
- அலெஜான்ட்ரோ டேவிடோ
- தாமஸ் மெகாக்
- மெக்ஸிகோ திறந்த டென்னிஸ்
- மெக்சிகோ ஓ
- அகாபுல்கோ, மெக்ஸிகோ
- டேவிடோவிச்
- மெகக்
- தின மலர்
அகாபுல்கோ: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் அரையிறுதிப் போட்டியில் நேற்று ஸ்பெயின் வீரர் அலஜாண்ட்ரோ டேவிடோவிச், செக் வீரர் தாமஸ் மெகாக் அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
மெக்சிகோ நாட்டின் அகாபுல்கோ நகரில் மெக்சிகோ ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன. முதல் போட்டியில் ஸ்பெயின் வீரர் அலஜாண்ட்ரோ டேவிடோவிச், கனடா வீரர் டெனிஸ் விக்டரோவிச் மோதினர். இப்போட்டியில் இரு செட்களும் கடும் சவாலாக அமைந்தபோதும் அவற்றை டேவிடோவிச் கைப்பற்றினார். இதனால், 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் அவர் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு அரையிறுதியில் செக் வீரர் தாமஸ் மெகாக், அமெரிக்க வீரர் பிராண்டன் நகாஷிமா மோதினர். முதல் செட்டை மெகாக், 2வது செட்டை நகாஷிமா கைப்பற்றினர். இதனால் 3வது செட் பரபரப்பாக அமைந்தது. கடைசியில் அதை மெகாக் கைப்பற்றினார். இதனால், 6-4, 1-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று அவர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். டேவிடோவிச் – மெகாக் இடையிலான இறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.
The post மெக்சிகோ ஓபன் டென்னிஸ்; டேவிடோவிச், மெகாக் இறுதிச் சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.
