×

ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

புதுக்கோட்டை, மார்ச் 1: தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டை திலகர் திடலில் ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட திலகர் திடலில் தெரு வியாபாரத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தெரு வியாபாரிகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்.

தற்போது வியாபாரம் செய்கின்ற இடங்களிலிருந்து தெரு வியாபாரிகளை வெளியேற்றக் கூடாது, தெரு வியாபாரத்தை முறைப்படுத்துதல் மற்றும் தெரு வியாபாரத்தை பாதுகாத்தல் சட்டத்தை அனைத்து அதிகாரங்களும் வணிகக் குழுவிற்கே வழங்கப்பட்டுள்ளதால் காவல்துறை உள்ளாட்சித் துறை நெடுஞ்சாலை துறை வனத்துறை அதிகாரிகளின் சட்டவிரோத தலையீடு மற்றும் அத்துமீறல் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

The post ஏஐடியுசி தெரு வியாபார தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : AITUC Street Vendors Workers' Association ,Pudukkottai ,Tilak Thidal ,Pudukkottai Corporation… ,Dinakaran ,
× RELATED நித்திரவிளை அருகே கல்லூரி மாணவி மாயம்