- ஒழிப்பு விழிப்புணர்வு
- Jayankondam
- அரியலூர் மாவட்ட ஆட்சியர்
- வரலக்ஷ்மி
- மாவட்ட நியமிக்கப்பட்ட அலுவலர்
- அரியலூர் உணவு பாதுகாப்பு துறை
- அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி
- முதல்வர்
- தவிகுமார்…
- மருந்து ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
- தின மலர்
ஜெயங்கொண்டம், மார்ச்.1: அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில் நடைபெற்ற இந்த பேரணிக்கு, அரியலூர் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் வரலட்சுமி தலைமை வகித்து பேரணியை துவக்கி வைத்தார். அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தவிகுமார் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் உணவு பாதுகாப்பு அலுவலர் அகத்தியா வரவேற்றார். பேரணியானது அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவங்கி திருச்சி ரோடு, பேருந்து நிலையம், சன்னதி தெரு, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பள்ளியில் முடிவுற்றது. பேரணியில் போதைப் பொட்கள் பயன்படுத்துவதால ்ஏற்படும் விளைவுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாரு சென்றனர்.
மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர். பேரணியில் தன்னார்வலர்கள் மற்றும் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள், உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள், ஜெயங்கொண்டம் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் பாபு, களப்பணி உதவியாளர் விஜயகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். பேரணியின் இறுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.
The post ஜெயங்கொண்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
