×

விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் பலி

திருக்கோவிலூர்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அல்லிமுத்து மகன் நவீன் ராஜ் (15). இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். அல்லிமுத்துக்கு சொந்தமான மாடு மேய்ச்சலுக்கு சென்று வெகு நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லையாம்.

எனவே, நவீன் ராஜூம் அவரது நண்பர் கோபி (14) என்பவரும் மாட்டை தேடி சென்றனர். புத்தூர் கிராமத்தில் இருந்து நெற்குணம் கிராமத்தை நோக்கி விவசாய நிலத்தில் தேடிக் கொண்டு சென்றனர். அப்போது நெற்குணம் பகுதியில் உள்ள ராஜசேகர் என்பவருடைய நிலத்தில் இறங்கிய போது மின்வேலியில் சிக்கி நவீன்ராஜ், கோபி ஆகிய இருவரும் சிக்கி தூக்கி வீசப்பட்டனர். இதில் நவீன்ராஜ் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

The post விவசாய நிலத்தில் மின்வேலியில் சிக்கி பள்ளி மாணவன் பலி appeared first on Dinakaran.

Tags : Minwali ,Thirukovilur ,Naveen Raj ,Puttur village ,Viluppuram District Thirukovilur ,Allimut ,
× RELATED செங்கல்பட்டு – காஞ்சிபுரம்- அரக்கோணம்...