×

மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும்: பதிவுத்துறை உத்தரவு

சென்னை: மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படும் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பொது மக்களிடமிருந்து வரப்பெற்றுள்ள கோரிக்கைகளின் அடிப்படையிலும், அரசின் வருவாய் பெருக்கும் நோக்கிலும் மார்ச் மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஆவண பதிவினை ஏற்பதற்கு ஏதுவாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் ஆவண பதிவு முடியும் வரை செயல்பாட்டில் வைத்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படவேண்டும். மேலும் அன்றைய தினங்களில் ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற எதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவல பணியாளர்கள் பொதுமக்களுக்கான உதவி மையம் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட மென்பொறியாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர் என பதிவுத்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

The post மார்ச் மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சார்பதிவாளர் அலுவலகம் செயல்படும்: பதிவுத்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Proxy Office ,Chennai ,Registry Department ,Proxy ,Dinakaran ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...