×

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் ஆலோசனை

திருச்சி, பிப்.27: பிப்.24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு தென்னக ரயில்வே திருச்சி மண்டல பல்துறை பயிற்சி நிறுவனத்தில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் குழந்தை உரிமை பாதுகாப்பு குறித்த பயிற்சி நேற்று நடைபெற்றது.

மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சமுதாயத்தின் பங்கு மற்றும் கிராம வட்டார மாவட்ட மற்றும் பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி மண்டல வார்டு அளவிலான குழந்தை பாதுகாப்பு குழுக்களின் செயல்பாடுகள் பணிகள் குறித்தும் பெண் குழந்தைகள் மீதான வன்முறைகளான கருக்கலைப்பு, சிசுக்கொலை, பாலியல் வன்முறை, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை மற்றும் குழந்தைகள் மீதான சித்திரவதைகள் குறித்தும் குழந்தைகள் நலன் சார்ந்த சட்டங்களான குழந்தை திருமண தடுப்புச் சட்டம், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் மற்றும் இளஞ்சிறார் நீதி சட்டம்,

பெண் குழந்தைகள் பாதுகாப்பு அரசு நலத்திட்டங்களான முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், தொட்டில் குழந்தை திட்டம், முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டம் மிஷன் வாத்சல்யா நிதி ஆதரவுத் திட்டம் செல்வமகள் சேமிப்பு திட்டம், மூவாலூர் ராமாமிர்தம் புதுமைப்பெண் திட்டம், குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண்களான குழந்தைகள் உதவி மைய எண் 1098, பள்ளி கல்வித்துறை தொலைபேசி எண் 14417 மற்றும் பெண்கள் உதவி மைய எண் 181 செயல்பாடுகள் பணிகள் குறித்தும் விழிப்புணர்வு வழங்கப்பட்டது. தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு குழந்தை பாதுகாப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ரயில்வே பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை காப்பது எப்படி? பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின நிகழ்ச்சியில் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Girl Child ,Day ,Trichy ,State Girl Child Protection Day ,Girls ,Let ,and Child ,Southern Railway Trichy Zone Multi-disciplinary Training Institute ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் அழைப்பு...