×

மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கும்மிடிப்பூண்டி: பராமரிப்பு பணி காரணமாக, மூர்மார்க்கெட் -கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் இன்று மற்றும் வரும் 1ம் தேதி 18 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:
மூர் மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி இடையே இன்று காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள், மறுமார்க்கமாக கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் இடையே 9.55, 10.55, 11.25, 12, 1, 2.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள், சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் இடையே காலை 11.45, 1.15 மணிக்கும், சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் இன்று மற்றும் வரும் 1ம் தேதி ஆகிய இரண்டு நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல் செங்கல்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையேயும், கும்மிடிப்பூண்டி – தாம்பரம் இடையே மதியம் 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே இன்று மற்றும் 1ம் தேதி ஆகிய 2 நாட்களுக்கு பாதி ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post மூர்மார்க்கெட்- கும்மிடிப்பூண்டி மார்க்கத்தில் 18 மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Moormarket-Gummidipoondi ,Southern Railway ,Gummidipoondi ,Moormarket-Gummidipoondi route ,Moormarket ,Gummidipoondi… ,Dinakaran ,
× RELATED ‘ரயில் ஒன்’ செயலி மூலம்...