- விவசாயிகள் சங்கம்
- மேட்டுப்பாளையம்
- தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
- ஜனாதிபதி
- வேணுகோபால்
- மாவட்ட துணைத் தலைவர்
- வேலுச்சாமி
- கிருஷ்ணசாமி
- சிவகுமாரின்
- தின மலர்
மேட்டுப்பாளையம், பிப்.26: தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று மேட்டுப்பாளையத்தில் அச்சங்கத்தின் மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் வேலுச்சாமி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப்பாளர் சிவகுமார் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் யானைகளை வனத்திற்கு வெளியே வராமல் தடுக்க தவறிய வனத்துறையை கண்டித்தும், உடனடியாக யானைகளை தடுக்க கோரியும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வனச்சரக அலுவலகங்களில் விவசாயிகள், பொதுமக்கள் ஒருங்கிணைந்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவது என்றும், முதற்கட்டமாக மார்ச் முதல் வாரத்தில் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தை துவக்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், வன எல்லையில் இருந்து 3 கிமீ வரையிலும், 3 கிமீ அப்பாலும் விளைநிலங்களுக்கு வருகின்ற அனைத்து காட்டு பன்றிகளையும் வனத்துறையினர் சுட்டுக்கொல்ல வேண்டும். வனத்துறையினர் தீர்வு காணவில்லை என்றால் விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்று சேர்ந்து காட்டு பன்றிகளை கொல்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post வனவிலங்குகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம்: விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் appeared first on Dinakaran.
