- முதல் அமைச்சர்
- திமுக வடக்கு மாவட்ட வணிகம்
- தொண்டாமுத்தூர்
- வடக்கு மாவட்ட வணிகக் குழு
- திமுக மாவட்டம்
- வடக்கு கோயம்புத்தூர்
- மாவட்ட வணிகக் குழு
- ஜனாதிபதி
- தியாகராஜன்
- மாவட்ட வணிகம்
- வேலுச்சாமி
- திமுக வடக்கு மாவட்ட வர்த்தக அணி
- தின மலர்
தொண்டாமுத்தூர்,பிப்.26: வடகோவையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வடக்கு மாவட்ட வர்த்தக அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் தியாகராஜன் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வேலுச்சாமி, துணை அமைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில வர்த்தகரணி இணைச் செயலாளர் முருகவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வடக்கு மாவட்டம் முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
மாவட்ட முழுவதும் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது. முதியோர் இல்லங்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள முதியவர்களுக்கும் ஆதரவற்றவர்களுக்கும் அறுசுவை உணவு வழங்குவது. கல்வியில் மும்மொழி கொள்கை என இந்தியை திணிப்பது மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் இழுத்தடிப்பது உள்ளிட்ட ஒன்றிய அரசின் நடவடிக்கைகளை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சரின் நலத்திட்ட உதவிகளையும், மக்கள் நல பணிகளையும் தமிழக அரசின் சாதனைகளையும் துண்டு பிரசுரங்களாக அச்சடித்து பொதுமக்களிடம் கொடுத்து பிரசாரம் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள்: திமுக வடக்கு மாவட்ட வர்த்தக அணி தீர்மானம் appeared first on Dinakaran.
