×

இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட திராவிட கழகம் சார்பில், இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று காஞ்சிபுரத்தில் நடந்தது. மாவட்ட திராவிட தலைவர் முரளி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் வேலாயுதம் வரவேற்பு பேசினார். காப்பாளர் அசோகன், மாவட்ட செயலாளர் இளையவேல், நிர்வாகிகள் சிதம்பரநாதன், மோகன், இளம்பரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைமை கழக பேச்சாளர் நாத்திகம் நாகராஜன், சிஐடியு மாநில செயலாளர் முத்துக்குமார், தமிழ் உரிமை கூட்டமைப்பு நிர்வாகி காஞ்சி அமுதன், விசிக மாநகர செயலாளர் மதிஆதவன், மதிமுக மாநகர செயலாளர் மகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். இவர்கள், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் தமிழ்நாடு அரசுக்கு தரவேண்டிய நிதியை விடுவிப்போம் என்று ஒன்றிய அரசு கூறியதை கண்டித்தும், தமிழகத்தில் இந்தி மொழி திணிப்பை கண்டித்தும் பேசினார்கள். முடிவில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோவிந்தராஜ் நன்றி கூறினார்.

The post இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Anti-Hindi ,Kanchipuram ,-Hindi ,Kanchipuram District Dravida Kazhagam ,District Dravida ,Murali ,City Secretary ,Velayudham ,Warden Asokan ,District Secretary ,Ilayavel ,Administrators ,Chidambaranathan ,
× RELATED உத்திரமேரூரில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்