- அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
- தேவாரியமப்பாக்கம்
- Walajabad
- அரசு தொடக்கப்பள்ளி நூற்றாண்டு விழா
- அரசு உயர்நிலைப் பள்ளி வெள்ளி விழா கொண்டாட்டம்
- பஞ்சாயத்து
- வால்லாபாத் யூனியன்
- பஞ்சாயத்து கவுன்சில்
- ஜனாதிபதி
- அஜய் குமார்
- உத்திரமேரூர்…
வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியில் அரசு ஒன்றிய தொடக்க பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் அரசு உயர்நிலைப் பள்ளியின் வெள்ளி விழா நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் கலந்துகொண்டு அரசு பள்ளிகளில் செயல்பாடுகள் கல்விக்காக தமிழக அரசு கொண்டுவரும் திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், வரும் காலங்களில் மாணவ-மாணவிகள் தங்களின் வளர்ச்சி பாதையை குறிக்கோளாக கொண்டு கல்வி கற்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து, கூட்டத்தில் பேசிய, ஆசிரியர் மற்றும் கிராம மக்கள் இப்பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும்.
பள்ளிக்கு சுற்றுச்சூழல் அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் சேகர், மாவட்டக் கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் எழில், வட்டார கல்வி அலுவலர் நந்தாபாய், முன்னாள் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசுந்தரம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அமளிசுதா முனுசாமி, சஞ்சய்காந்தி, உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், கிராம மக்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். பள்ளியில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
The post தேவரியம்பாக்கத்தில் அரசு பள்ளி நூற்றாண்டு விழா appeared first on Dinakaran.
