×

கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

 

ஓசூர், பிப்.24: சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் 40க்கும் மேற்பட்ட தனியார் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் கிரானைட் கற்கள் அண்டை மாநிலமான கர்நாடகா மற்றும் இதர மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி கலெக்டர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில், கனிமவள கடத்தல் மற்றும் அரசின் உரிய அனுமதியின்றி கிரானைட் கடத்தப்படும் லாரிகளை சூளகிரி தாசில்தார் மோகன்தாஸ் தலைமையிலான வருவாய் துறையினர் வாகன தணிக்கையின் போது, லாரிகள் பறிமுதல் செய்தனர். கிரானைட் லாரிகளை பறிமுதல் செய்த வருவாய் துறையினர் சூளகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

The post கிரானைட் கற்கள் கடத்திய லாரி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hosur ,Sulagiri ,Karnataka ,Krishnagiri ,Dinakaran ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு