காவேரிப்பட்டணம், ஜன.3: காவேரிபட்டணம் வட்டாரம் சுண்டேகுப்பம் கிராமத்தில் விவசாயிகளுக்கு செல்போனில் உழவன் செயலி பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் முறைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. அதியமான் வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி கல்லூரி 4ம்ஆண்டு மாணவிகள் திவ்யபாரதி, இசையமுது, ஹரிதர்ஷினி ஹரோலின்மெர்சி, ஹர்ஷித்தா, ஹேமமாலினி, ஹேம்பிரியா ஜெயந்தி, ஜெயஸ்ரீ, ஜீவதர்ஷினி, வேனவிசித்ரா, ஜோதிலதா, சித்ரா வேளாண்மை மேற்பார்வையாளர் தலைமையில் விவசாயிகளுக்கு வயலில் செயல் விளக்கம் அளித்தனர். உழவன் செயலி தமிழ்நாடு அரசால் விவசாயிகளுக்காகவே கொண்டுவரப்பட்டது. இதில் மொத்தம் 24 சேவை திட்டங்கள் உள்ளன. சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு, விதை இருப்பு நிலை, உரம் இருப்பு நிலை போன்ற பல்வேறு சேவை திட்டங்களை இலவசமாக அறிந்து கொள்ள முடியும். அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என அறிவுரை வழங்கிய மாணவிகள், இதில் கலந்துகொண்ட 30 மேற்பட்ட விவசாயிகளுக்கு உழவன் செயலியை எவ்வாறு பதிகிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என்ற முறையை எடுத்துரைத்தனர்.
