×

ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னை வீரர்கள் சாம்பியன்

புனே: மகா ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டியில் சென்னையை சேர்ந்த ஜீவன் நெடுஞ்செழியன், விஜய் சுந்தர் பிரசாந்த் இணை அபாரமாக ஆடி சாம்பியன் பட்டம் வென்றது. மகா ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் ஆடவர் இரட்டையர் இறுதிப் போட்டி தானே நகரில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இப்போட்டியில் இந்தியா சார்பில் சென்னையை சேர்ந்த ஜீவன், விஜய் சுந்தர் பிரசாந்த் இணை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிளேக் பேல்டன், மாத்யூ கிறிஸ்டோபர் ரோமியோஸ் இணையுடன் மோதியது.

முதல் செட்டை இழந்தபோதும், அடுத்த இரு செட்களையும் சென்னை வீரர்கள் சிறப்பாக ஆடி கைப்பற்றினர். இதனால், 3-6, 6-3, 10-0 என்ற செட் கணக்கில் அவர்கள் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர். இப்பட்டத்தை இவ்விருவரும் சேர்ந்து பெறுவது இதுவே முதல் முறை. இருப்பினும், பிரசாந்திற்கு இது 3வது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post ஆடவர் இரட்டையர் பிரிவில் சென்னை வீரர்கள் சாம்பியன் appeared first on Dinakaran.

Tags : Pune ,Jeevan Nedunjeziyan ,Chennai ,Vijay Sundar Prashant ,Grand Open ATP Challenger Tennis Championship Men's Doubles ,Grand Open ATP Challenger Tennis Championship ,Dinakaran ,
× RELATED அடிலெய்டில் ஆஸ்திரேலியா அதிரடி: 82...