×

நவீனம், பாதுகாப்பு வேண்டும் 21ம் நூற்றாண்டுக்கு ரயில்வே தயாராக உள்ளதா? ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’ரேபரேலியில் உள்ள மாடர்ன் கோச் தொழிற்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுடனான கலந்துரையாடலின் போது, ​​ஒரு முக்கியமான கேள்வி எழுந்தது. கோடிக்கணக்கான இந்தியர்களின் பயணத்தின் முதுகெலும்பாக இருக்கும் நமது ரயில்வே, 21ம் நூற்றாண்டுக்கு உண்மையிலேயே தயாராக உள்ளதா என்பதே அந்தக் கேள்வி.

தற்போதைய தேவைகளைக் கருத்தில் கொண்டு, அதை மேலும் நவீனமாகவும், பாதுகாப்பாகவும், திறமையாகவும் மாற்ற விரைவான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நமது பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கடின உழைப்புக்கு சரியான திசை கொடுக்கப்பட்டு, காலத்தின் தேவைக்கேற்ப உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், ரயில்வே போக்குவரத்தில் மட்டுமல்ல, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்க முடியும்’ என்று தெரிவித்துள்ளார்.

The post நவீனம், பாதுகாப்பு வேண்டும் 21ம் நூற்றாண்டுக்கு ரயில்வே தயாராக உள்ளதா? ராகுல்காந்தி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Lok Sabha ,Modern Coach Factory ,Rae Bareli ,Indians ,Dinakaran ,
× RELATED வாக்கு திருட்டு பாஜவின் டிஎன்ஏவில்...