- கத்தார் டென்னிஸ் காலிறுதிப் போட்டிகள்
- லெஹெக்கா
- தோஹா
- கார்லோஸ் அல்கராஸ்
- கத்தார் ஓப்பன்
- கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிகள்
- அல்கராஸ்
- தின மலர்
தோஹா: கத்தார் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் உலகின் நம்பர் 3 வீரர் கார்லோஸ் அல்காரஸ் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கத்தார் ஓபன் டென்னிஸ் காலிறுதிப் போட்டிகள் தோஹாவில் நேற்று முன்தினம் இரவு நடந்தன. ஒரு போட்டியில் உலகின் 3ம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், செக் நாட்டை சேர்ந்த உலகின் 23வது நிலை வீரர் ஜிரி லெஹெக்கா உடன் மோதினார். முதல் இரு செட்களில் இருவரும் தலா ஒன்றை கைப்பற்றினர். இதையடுத்து 3வது செட் விறுவிறுப்பாக நடந்தது. அந்த செட்டை யாரும் எதிர்பாராத வகையில் லெஹெக்கா அற்புதமாக ஆடி கைப்பற்றினார். இதனால், 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் லெஹெக்கா வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு காலிறுதியில் பிரிட்டன் வீரர் ஜேக் டிரேப்பர், இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி மோதினர். அந்த போட்டியில் 4-6, 6-4, 6-3 என்ற செட்கணக்கில் ஜேக் டிரேப்பர் வென்றார். 3வது காலிறுதியில் ரஷ்யாவின் ஆண்ட்ரே ஆண்ட்ரெயெவிச் ரூப்லெவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மோதினர். அந்த போட்டியில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் ரூப்லெவ் வென்றார். 4வதாக நடந்த காலிறுதியில் கனடா வீரர் பெலிக் அகர் அலியாசிமே, ரஷ்ய வீரர் டேனில் செர்கெயெவிச் மெத்வதெவ் மோதினர். அந்த போட்டியில் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை பெலிக் கைப்பற்றினார். அப்போது உடல்நலக் குறைவால் மெத்வதெவ் போட்டியிலிருந்து விலகியதால் பெலிக் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. வெற்றி பெற்ற நால்வரும் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
* ஆடவர் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி இணை தோல்வி
கத்தார் ஓபன் ஆடவர் இரட்டையர் முதலாவது அரையிறுதிப் போட்டியில் நேற்று பிரிட்டன் வீரர்கள் நீல் ஸ்குப்ஸ்கி, ஜோ சாலிஸ்பரி இணை, பிரிட்டன் வீரர் ஹென்றி பேட்டன், பின்லாந்து வீரர் ஹாரி ஹெலியோனாரா இணையுடன் மோதியது. அந்த போட்டியில் நீல் ஸ்குப்ஸ்கி, சாலிஸ்பரி இணை, 3-6, 6-3, 10-5 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இரண்டாவதாக நடந்த அரை இறுதியில் இந்திய வீரர் யூகி பாம்ப்ரி, குரோஷியாவின் இவான் டோடிக் இணை, பிரிட்டன் வீரர்கள் லாயிட் கிளாஸ்பூல், ஜூலியன் கேஷ் இணையுடன் மோதியது. இதில் யூகி பாம்பரி இணை, 6-7, 3-6 என்ற நேர் செட்களில் தோற்று வெளியேறியது.
The post கத்தார் டென்னிஸ் காலிறுதி அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி: செக் வீரர் லெஹெக்காவிடம் வீழ்ந்தார் appeared first on Dinakaran.
