×

துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா-ஆண்ட்ரீவா டவுசன்-முச்சோவா பலப்பரீட்சை

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தொடரில் நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. இதில் கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6-2, 7-6 (7-2) என்ற புள்ளி கணக்கில் அமெரிக்காவின் சோபியா கெனினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

செக் குடியரசின் முச்சோவா 6-2, 7-5 என்ற கணக்கில் ரோமேனியாவின் சொரானா சிர்ஸ்டியையும், டென்மார்க்கின் கிளாரா டெளசன் 7-6(7-4), 6-4 என்ற புள்ளி கணக்கில் செக் நாட்டின் லிண்டா நோஸ்கோவாவையும், போலந்தின் இகா ஸ்வியாடெக்கை ரஷ்யாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 6-3,6-3 என்ற புள்ளி கணக்கிலும் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இன்று மாலை நடக்கும் முதல் அரையிறுதியில் ரைபகினா மற்றும் ஆண்ட்ரீவாவும், இரவு நடக்கும் 2வது அரையிறுதியில் டவுசன் மற்றும் முச்சோவாவும் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

The post துபாய் ஓபன் மகளிர் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா-ஆண்ட்ரீவா டவுசன்-முச்சோவா பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Tags : Dubai Open Women's Tennis ,Raibakina ,Andreeva Dowson ,Muchowa ,Dubai ,Dubai Open Women's Tennis Singles Series ,United Arab Emirates ,Elina Raibakhina ,Kazakhstan ,Sofia Kenin ,United States ,Andreeva Dawson ,Muchova ,Test ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் இன்று 4வது டி.20 போட்டி:...