×

தொழில் வரி செலுத்த கூறி நோட்டீஸ் வினியோகம்

 

அன்னூர்,பிப்.19: கோவை மாவட்டம், அன்னூர் பேரூராட்சியில் 5600 குடிநீர் இணைப்புகள் உள்ளன. 9300 சொத்து வரி செலுத்துவோர் உள்ளனர். 28 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தற்போது தீவிர வரி வசூல் இயக்கம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் பிரதீப் குமார் மற்றும் ஊழியர்கள் அன்னூர் மெயின் ரோடு, கடைவீதி, கோவை ரோடு பகுதியில் உள்ள பேக்கரி,

ஹோட்டல், துணி கடை, மொபைல் கடை, தொழிற்சாலைகள், மில்கள் ஆகியவற்றில் தொழில்வரி மற்றும் லைசன்ஸ் கட்டணம் செலுத்த கூறி நோட்டீஸ்களை வினியோகித்தனர். குடிநீர் கட்டணம், சொத்து வரி ஆகியவற்றை செலுத்தும் படி ஆட்டோ பிரசாரமும் பேரூராட்சி ஊழியர்கள் செய்து வருகின்றனர். பேரூராட்சியில் வளர்ச்சி பணிக்கு உதவ விரைவில் நிலுவை இல்லாமல் சொத்து வரி, குடிநீர் கட்டணத்தை செலுத்தி குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பை தவிர்க்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

The post தொழில் வரி செலுத்த கூறி நோட்டீஸ் வினியோகம் appeared first on Dinakaran.

Tags : Annur Town Panchayat, Coimbatore district ,Town Panchayat ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது