- திமுக
- பெருந்துறை
- ஈரோடு
- முன்னாள் அமைச்சர்
- தோப்பு வெங்கடச்சலம்
- ஈரோடு மத்திய மாவட்டம் திமுக
- பவானி சாலை
- பெருந்துறை, ஈரோடு மாவட்டம்...
ஈரோடு, பிப்.18: பெருந்துறையில் பேரரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். திமுக ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து ஈரோடு மாவட்டம் பெருந்துறை பவானி சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலைக்கு நேற்று மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், மத்திய மாவட்ட பொறுப்பாளரான தோப்பு வெங்கடாசலம் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, பெரியார், கலைஞர் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச்செயலாளரும், ராஜ்யசபா எம்பியுமான அந்தியூர் செல்வராஜ், நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம், திமுக இளைஞர் அணி மாநில துணை செயலாளரும், ஈரோடு எம்பி.யுமான பிரகாஷ், விவசாய அணி மாநில இணை செயலாளர் குறிஞ்சி சிவகுமார், எம்எல்ஏக்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், சந்திரகுமார், திமுக மாநகர செயலாளர் சுப்ரமணியம், மாநகராட்சி மேயர் நாகரத்தினம், துணை மேயர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் கேபி சாமி மற்றும் கட்சியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post பெருந்துறையில் திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை appeared first on Dinakaran.
