×

கார் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் ஹமாஸ் ராணுவ கமாண்டர் பலி

ஜெருசலேம்: இஸ்ரேல் -ஹமாஸ் இடையே கடந்த நவம்பர் மாத இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதனை தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவதற்கான காலக்கெடுவிற்கு ஒரு நாள் முன்னதாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோவில் கார் மீது டிரோன் தாக்குதலில் கார் தீப்பிடித்து எரிகின்றது. இதில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். லெபனான் சோதனை சாவடி அருகே இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்நிலையில் லெபனானில் ஹமாஸ் ராணுவ கமாண்டர் முகமது ஷாஹீன் கொல்லப்பட்டதை இஸ்ரேல் ராணுவம் உறுதி செய்துள்ளது.

The post கார் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் ஹமாஸ் ராணுவ கமாண்டர் பலி appeared first on Dinakaran.

Tags : Hamas ,Israel ,Jerusalem ,southern Lebanon ,Dinakaran ,
× RELATED 3வது ஆண்டாக தொடர்ந்து உலகின்...