×

ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாமக்கல்: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் கடந்த இரு தினங்களுக்கு முன் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அம்மாவட்டங்களில் ஏராளமான கோழிகள் இறந்துள்ளது. இதன் எதிரொலியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில், பாதுகாப்பு நடவடிக்கைகளை கோழிப்பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இங்குள்ள கோழிப்பண்ணைகளில் கிருமி நாசினி தெளித்தல், உயிர்பாதுகாப்பு முறைகளை கடைபிடித்தல் போன்ற நடவடிக்கையை பண்ணையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கோழிப்பண்ணைகளுக்கு, கோழித்தீவனம் ஏற்றி வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளித்த பிறகே பண்ணைக்குள் அனுமதிக்கப்படுகிறது.

The post ஆந்திராவில் பறவைக்காய்ச்சல் எதிரொலி: நாமக்கல் கோழிப்பண்ணைகளில் நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம் appeared first on Dinakaran.

Tags : ANDHRA ,NAMAKAL ,NAMAKKAL ,EAST GODAVARI ,WEST GODAVARI ,KRISHNA ,AP STATE ,Namakkal district ,
× RELATED அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின்...