×

அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை; எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை: ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.எஸ். பதிலடி!!

சென்னை: அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை. எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை என ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பாவுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்; அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை. எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை. ஓ.பி.எஸ். நீதிமன்றம் செல்லாமல் இருந்தால் கட்சியில் சேர்ப்பது பற்றி எடப்பாடியிடம் பேசுவேன் என்று கூறியிருந்தார் ராஜன் செல்லப்பா. ஆர்.பி.உதயகுமார் என்னை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆர்.பி. உதயகுமார் எப்படிப்பட்டவர் என்று மதுரையில் இருப்பவர்களுக்கு தெரியும். 6 பன்னீர்செல்வத்தை எனக்கு எதிராக தேர்தலில் நிறுத்தினார். அதிமுக டெபாசிட் இழப்பதற்கு முழு காரணம் ஆர்.பி.உதயகுமார்தான். அதிமுகவில் இணைக்குமாறு யார் வீட்டு வாசலிலும் நான் போய் நிற்கவில்லை. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. எனது மகனுக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பு கொடுத்தது ஜெயலலிதாதான்.

பழனிசாமி தலைமையில் அதிமுக எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வி. இரட்டை இலைக்கு எதிராக நான் போட்டியிடும் சூழலை உருவாக்கியது யார். தனது ஆதங்கத்தைத்தான் செங்கோட்டையன் வெளிப்படுத்தியிருந்தார். 23 ஆண்டுகாலம் மாவட்ட செயலாளராக இருந்துள்ளார் செங்கோட்டையன். அதிமுக ஒன்று சேராமல் தேர்தலில் வெற்றி பெற முடியாது. தனது ஆதங்கத்தைத்தான் செங்கோட்டையன் வெளிப்படுத்தியிருந்தார். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post அதிமுகவில் சேர்க்கும்படி நான் யாரிடமும் கேட்கவில்லை; எனக்காக யாரும் பரிந்து பேச தேவையில்லை: ஆர்.பி.உதயகுமாருக்கு ஓ.பி.எஸ். பதிலடி!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,OPS ,RP Udayakumar ,Chennai ,O. Panneerselvam ,Rajan Chellappa ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரூரில் கயிறு, பானை விற்பனைக்கு குவிப்பு