×

மாங்காய் வரத்து அதிகரிப்பு

 

கோவை, பிப். 17: கோவை உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள பழ மண்டியில் இந்த ஆண்டு மாங்காய் வரத்து அதிகமாக வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் இருந்து வரக்கூடிய மாங்காய் மற்றும் மாம்பழங்கள் கோவைக்கு விற்பனைக்காக வருகின்றன. இவை உள்நாட்டு தேவை போக, துபாய், மஸ்கட், சவுதி போன்ற வெளிநாட்டு நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

கோவை மாங்காய் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜவகர் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது மாங்காய் மற்றும் மாம்பழங்கள் வரத்து அதிகரித்துள்ளது. தர்மபுரியில் இருந்து மாங்காய்கள் அதிகளவில் வரத் துவங்கியுள்ளன. இன்னும் 6 மாதங்களுக்கு மாங்காய் வரத்து இருக்கும். மாங்காய் மற்றும் மாம்பழத்தின் விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. தற்போது மார்கெட்டில் மொத்தமாக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரை தினசரி விற்பனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மாங்காய் வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Pullukadu ,Ukkadam, Coimbatore ,Tamil Nadu ,Kerala ,Andhra Pradesh ,Karnataka ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது