×

வெள்ளிங்கிரி மலை கோயிலில் ரூ.1.97 கோடி மதிப்பிலான கட்டிடம் இன்று திறப்பு

 

கோவை, பிப்.17: கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென் கயிலாயம் என்ற சிறப்பு பெற்ற வெள்ளிங்கிரி மலை ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களுக்கான லிங்கங்களுடன் 7வது மலையில் சுயம்பு லிங்கமாக கிரி மலை ஆண்டவர் இருப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். ஆண்டு தோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை இந்த மலையில் பக்தர்கள் ஏறி சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலை ஏறி செல்ல பக்தர்கள் அதிகளவு குவிந்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலில் பல்வேறு திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருகிறது. கோயில் அடிவாரத்தில் முடி காணிக்கை மண்டபம், கழிவறைகள், மருத்துவ மையம் போன்ற கட்டிடங்கள் 1.97 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. இந்த கட்டிடங்கள் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடியோ கான்பரசின்சிங் மூலமாக இந்த கட்டிடங்களை திறக்கவுள்ளார்.

The post வெள்ளிங்கிரி மலை கோயிலில் ரூ.1.97 கோடி மதிப்பிலான கட்டிடம் இன்று திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vellingiri Hill Temple ,Coimbatore ,Vellingiri Hill Lord Temple ,Then Kailayam ,Western Ghats ,Lord ,Giri Hill ,
× RELATED வியாபாரியிடம் மாமூல் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது