×

7 இடங்களில் வரிவசூல் சிறப்பு முகாம்

 

பெ.நா.பாளையம், பிப்.16: கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் ஊராட்சியில் ஏழு இடங்களில் வரி வசூல் செய்யும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
திங்கட்கிழமை விகேவி நகர் வினாயகர் கோவில், செவ்வாய் ஆசிரியர் காலனி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதன் எஸ்எம் நகர் கருப்பராயன் கோவில், வியாழன் மந்திராலயா கார்டன், வெள்ளி வட்டமலைபளையம் பிரிவு வினாயகர் கோவில், சனி ஸ்ரீராம் நகர் அம்மா பூங்கா, ஞாயிற்றுக்கிழமை ரங்கம்மாள் காலனி வினாயகர் கோவில் ஆகிய பகுதிகளில் ஊராட்சி சார்பில் வரி வசூல் முகாம் நடைபெறுகிறது. ஊராட்சி அலுவலகத்திலும் பெற்று கொள்ளப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் வரிகளை செலுத்தி ரசீது பெற்று கொள்ள அசோகபுரம் ஊராட்சிக்கான தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.

The post 7 இடங்களில் வரிவசூல் சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Fr. ,UN Camp ,Ashokapuram Uradchi ,Koi Tudyalur ,Vikvi Nagar Vinayagar Temple ,Teacher Colony Uratchi Union Initiation School ,Camp ,Dinakaran ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது