×

சட்டீஸ்கரில் உள்ளாட்சி தேர்தல் 10 மாநகராட்சிகளை பாஜ கைப்பற்றியது

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நடந்த மாநகராட்சி தேர்தலில் 10 மாநகராட்சிகளில் மேயர் பதவியை பாஜ கைப்பற்றியுள்ளது. சட்டீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தேவ் சாய் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கு உள்ள 10 மாநகராட்சிகள்,49 நகராட்சிகள் உள்பட 173 நகர்ப்புற உள்ளாட்சி இடங்களுக்கு கடந்த 11ம் தேதி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நேற்று தொடங்கியது. இதில் 10 மாநகராட்சிகளின் மேயர் பதவிகளை பாஜ வென்றுள்ளது. அதே போல் 35 நகராட்சிகளின் தலைவர் பதவி,81 பேரூராட்சி தலைவர் பதவிகளையும் அந்த கட்சி கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் 8 நகராட்சி தலைவர் பதவிகள்,22 பேரூராட்சி தலைவர் பதவிகளையும் பிடித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி ஒரு நகராட்சி தலைவர் பதவியை வென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி ஒரு பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளது. நகராட்சி தலைவருக்கான 5 இடங்கள்,பேரூராட்சி தலைவருக்கான 10 இடங்கள் சுயேச்சைகள் வசம் ஆகியுள்ளது. பெரும்பாலான நகராட்சிகளின் வார்டுகளில் பாஜ முன்னணியில் உள்ளது.

The post சட்டீஸ்கரில் உள்ளாட்சி தேர்தல் 10 மாநகராட்சிகளை பாஜ கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : elections ,Chhattisgarh ,Raipur ,Baja ,Chief Minister ,Vishnu Dev Sai ,Bahia ,Election ,Dinakaran ,
× RELATED கொல்கத்தாவில் பிரதமர் மோடியின்...