×

கபில்தேவுடன் பணியாற்றுவது கவுரவம்: ரஜினி நெகிழ்ச்சி

சென்னை: ஒரே படத்தில் கபில்தேவுடன் பணியாற்றுவது எனக்கு கிடைத்த கவுரவம் என்றார் ரஜினிகாந்த். ரஜினி மகள் ஐஸ்வர்யா, லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கிறார்கள். கவுரவ வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார். இது கிரிக்கெட் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாகிறது. இதனால் இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில்தேவ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார். அதற்காக மும்பையில் நேற்று நடைபெற்ற படப்பிடிப்பில் ரஜினியுடன் கபில்தேவ் கலந்துகொண்டார்.

மும்பையில் நடைபெற்ற ‘லால் சலாம்’ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் ரஜினிகாந்தும், கபில்தேவும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முதன்முறையாக உலகக் கோப்பை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய மரியாதைக்குரிய, அற்புதமான மனிதர் கபில்தேவுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகவும், கவுரவுமாகவும் கருதுகிறேன்’ என பதிவிட்டுள்ளார்.

The post கபில்தேவுடன் பணியாற்றுவது கவுரவம்: ரஜினி நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kapil Dev ,Rajini Leschi ,Chennai ,Rajinikanth ,Aishwarya ,Vishnu Vishal ,Vikrant ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மறக்குமா நெஞ்சம்; இதே நாளில் 28...