இதுவரை சனி பகவானின் ஆட்சி ராசியான மகரத்தில் சஞ்சரித்து வந்த சூரிய பகவான், சனியின் மற்றொரு ஆட்சிவீடான கும்பத்திற்கு மாறுவதே, மாசி மாதப் பிறப்பு எனக் கொண்டாடுகிறோம்! ஏற்கனவே கும்ப ராசியில் நிலைகொண்டுள்ள சனி பகவானுடன், சூரியனுக்கு இம்மாசி மாதத்தில் சேர்க்கை ஏற்படுகிறது. சூரிய பகவானுக்குச் சமமான வீரியமும், சக்தியும் கொண்டுள்ள சனி பகவான், சூரியனுடன் இணைவது, ஜோதிடக் கலையின் விதிகளின்படி, மிக முக்கிய கிரக மாறுதலாகும்!!மாசி மாதம் பிறப்பதற்கு முன்பே உலகளவில் மிக முக்கிய அரசியல் மற்றும் பொருளாதார மாறுதல்கள் ஏற்பட்டிருப்பதே இதற்குச் சான்றாகும். பல்லாயிரக்கணக்கான மக்களை பலிவாங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் முடிவுக்கு வந்ததே இத்தகைய கிரக மாறுதலின் மிக முக்கிய விளைவாகும்். வெகு சீக்கிரத்தில் ரஷிய – உக்ரைன் போரும் முடிவுக்கு வரவிருக்கின்றது. மேலும், அரசியலிலும், உலகப் பொருளாதாரத்்திலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவரும், அமெரிக்க நாட்டின் பல ெகாள்கைகள் – மாற்றங்கள் ஏற்பட்டுவருவதும் சூரியன் – சனி இணைவதின் விளைவுகளேயாகும். மாசி மாதத்தின் முக்கியத்துவத்திற்கு மற்றொரு காரணமும் உண்டு. இம்மாதத்தில்தான், “மாசி மகம்” எனும் மிக முக்கிய வானியல் நிகழ்ச்சியும் நிகழ்கிறது. அதாவது, நவ கிரகங்களில் அதிச்சார – வக்கிர தோஷங்கள் ஏதும் இ்ல்லாத குரு பகவான் புண்ணிய நதிகளில் ஆவீர்பவிக்கும் நிகழ்ச்சியும் ஏற்படுகிறது. இம்மாசி மக தினத்தன்று, தமிழக்கத்தின் புண்ணிய நதிகளான காவிரி, தாமிரபரணி ஆகிய நதிகளின் நீர்நிலைகளில் புனித நீராடுவது அறிந்தோ, அறியாமலோ நாம் பிறவியில் செய்துள்ள பாபங்கள் அனைத்தையும் போக்கி, கங்கா ஸ்நான பலனை அளிக்கிறது என புராதன நூல்களில் மகரிஷிகள் அருளியுள்ளனர். இத்தகைய தெய்வீக சக்தி, இம்மாசி மாதத்திற்கு உள்ளது.
மாசி 2 (14-2-2025) வெள்ளிக்கிழமை – மணவாளமாமுனிகள் திருநட்சத்திரம்.
மாசி 4 (16-2-2025) ஞாயிற்றுக்கிழமை திருநட்சத்திரம்.
மாசி 6 (18-2-2025) செவ்வாய்க்கிழமை – நாயன்மார் கோட்செங்கட் ேசாழர் பெருமானாரின் குரு பூஜை.
மாசி 8 (20-2-2025) வியாழக்கிழமை – மகேஸ்வராஷ்டமி – கால பைரவருக்கும், சிவபெருமானுக்கும் உகந்த – மகத்தான புண்ணிய மிகுந்த, இன்றைய தினத்தில் திருக்கோயிலுக்குச் சென்று, காலையில் சிவபெருமானையும், மாலை நேரத்தில் காலபைரவரையும் தரிசனம் செய்தால், அனைத்துத் துறைகளிலும் எவ்வகையான போட்டிகளிலும், (அது செய் தொழிலாகவே இருந்தாலும்) போட்டி பொறாமையற்ற, புதிய வழிமுறைகளைக்் கண்டறிந்து மகத்தான வெற்றி பெறுவீர்கள்.
9 (21-2-2025) வெள்ளிக்கிழமை – சித்தமகா புருஷர் அறிவானந்தர் திருநட்சத்திரம்.
மாசி 12 (24-2-2025) திங்கட்கிழமை – ஷட்திலா ஏகாதசி புண்ணிய தினம். இந்நன்னாளில் உபவாசமிருந்து, இறைவனைப் பூஜித்தால், இந்தப் பிறவியில் இக-பர சுகங்களனைத்தையும் அனுபவித்து, மீண்டும்் மறுபிறவியில்லா நிலையை ஏய்துவர். ஏகாதசி விரதம் அனுஷ்டிக்க விரும்புபவர்கள், கார்த்திகை மாதம் பௌர்ணமிக்கு முன்பு வரும் கைசிக ஏகாதசியில் அல்லது, மார்கழி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஆரம்பிப்பது உசிதமாகக் கருதப்படுகிறது.
மாசி 13 (25-2-2025) செவ்வாய்க்கிழமை – கிருஷ்ணபட்சம் பிரதோஷம். பிரதோஷ விரத மகிமை பற்றி அனைத்து இதிகாச புராணங்களிலும் மிக, மிகச் சிறப்பாகக் கூறப்பட்டு்ள்ளது. தேவர்களைக் காக்க, மந்திரகிரி மலையை மத்தாகவும், வாசுகி எனும் பாம்பை கயிறாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தபோது உண்டான ஆலகால விஷத்தைக் கண்டு அனைவரும் அஞ்சி நடுங்கிட, அந்நஞ்சினை சிவபெருமான அருந்தி, அண்டகோடி அகிலாண்டத்தையும் காத்த காலத்தையே பிரதோஷ காலமாகக் கருதப்படுகிறது. மன-நிறைவுடன், மனமகிழ்ச்சியுடன்கூடிய இல்வாழ்க்கை அமையவும், உடல் ஆரோக்கியம் மேம்படவும், கடன் அடைபட்டு, சந்ததியர் தழைத்தோங்கிடச் செய்யும் இவ்விரதத்தை உபவாசமிருந்து, கடைப்பிடித்து, மேன்மையுறுவோமாக!
மாசி 14 (26-2-2025) புதன்கிழமை – திருக்கச்சி நம்பிகள் திருநட்சத்திரம். மேலும், பாஷ்யகாரர் ராமானுஜர் திருநட்சத்திரம்.
மகா சிவராத்திரி!
மாசி 15 (27-2-2025) வியாழக்கிழமை – குலசேகராழ்வார், திருமலையாண்டார், கந்தாடையாண்டார் திருநட்சத்திரம்.
புண்ணிய தினங்களில் தன்னிகரற்றுத் திகழும் “மகா சிவராத்திரி” எனும் புனித தினமும் இம்மாசி மாத்தில்தான் நிகழ்கிறது. காட்டுப் பகுதி ஒன்றில் நடந்துசென்றுகொண்டிருந்த ஒருவனை புலி ஒன்று துரத்த, அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ஓர் மரத்தில் ஏறிக்கொண்டான்! எப்படியும் அவன் இறங்கித்தானே ஆகவேண்டும்? -என்றெண்ணிய புலி, மரத்தின் அடியிலேயே காத்திருந்தது!! இரவில் கண்விழித்து, கீழே விழுந்துவிடாமலிருக்க மரத்தின் மேலிருந்து இலைகளைப் பறித்து கீழேபோட்டபடியே இருந்தான். அவன் ஏறியிருந்த மரம், தற்செயலாக வில்வ மரமாகும்! என்றோ, எவராலோ, எக்காரணத்தினாலோ அம்மரத்தினடியில் விட்டுச் சென்ற சிவலிங்கம் ஒன்று இருந்தது. தூங்கிவிடாமல் இருப்பதற்கு அவன் போட்ட வில்வ தளங்கள் (இலைகள்) அனைத்தையும், சிவபெருமான், அவன் தனக்குச் செய்த அர்ச்சனையாக ஏற்று, அவனுக்கு “முக்தி” எனும் பிறப்பு – இறப்பு – மறு பிறப்பு இல்லாத மோட்ச சாம்ராஜ்யத்தை அளித்தருளினான். அத்தகைய மகத்தான சக்தியும், புண்ணிய பலனும் கொண்டுள்ள மகா சிவராத்திரி எனும் புனித தினம் இம்மாசி மாதம் 14-ந் தேதி (26-2-2025 புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகிறது. பாபங்களனைத்தையும் போக்கி, நல் வாழ்வளித்தருளும் இப்புண்ணிய தினம் இம்மாசி மாதத்தில்தான் நிகழ்வதால், மாசி மாதத்திற்கென்ற தனிப் பெருமை உள்ளது. அன்று, விரதமிருந்து, இரவில் கண்விழித்து, “ஓம் நமசிவாய” எனும் பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி, அம்பிகையையும், சிவபெருமானையும் பூஜிப்பது. அனைத்து பாபங்களையும் போக்கும். அன்றைய தினம் சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில் ஒன்றிற்குச் சென்று, தீபத்தில் நெய் சேர்த்து, தரிசிப்பது, அளவற்ற புண்ணிய பலன்களை அளிக்கும். மேலும், நான்கு ஜாமங்களிலும் வில்வ தளங்களால் சிவபெருமானை அர்ச்சிக்க, சகல பாவங்களும் விலகி, கைலாச பதவி அடைவது திண்ணம்.
மாசி 15 (27-2-2025) வியாழக்கிழமை – மௌனி அமாவாசை – இன்றைய தினத்தில், வாய்மூடி, எந்தவொரு வார்த்தையும் பேசாமல். மௌனத்தைக் கடைப்பிடித்தால், வாக்கினால் பிறைத் திட்டுதல் போன்ற பாவங்கள் விலகி, நல்லொழுக்கத்துடன் இப்பூவுலகில் அனைவராலும் விரும்பப்படும் மனிதராய், வையத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள்.
மாசி 16 (28-2-2025) வெள்ளிக்கிழமை – இன்றைய தினம் அனுமன் ராமபிரானை முதன்முதலில் சந்தித்த தினம். இ்ந்நன்னாளில், திருக்கோயிலுக்குச் சென்று, சீதாபிராட்டியுடன்கூடிய ÿராம-பக்த அனுமனுடன், சேர்த்து வணங்கி, “ஓம் ராமதூதாய, ஆஞ்சநேயாய, வாயு புத்ராய மஹா பலாய சீதா துக்க நிவாரணாய, லங்்கா விதாகாய” எனும் மஹா மந்திரத்தை 108 முறை சொல்லி வணங்க, வாழ்நாளில் இனி சந்திக்கவே முடியாது பிரிந்துவிட்டோம் என மனக்கஷ்டத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் மீண்டும் இணைவர். இணைபிரியா-நகமும் சதையும்போல என்றென்றும் நட்புடன் வாழ்வர்.
மாசி 17 (1-3-2025) சனிக்கிழமை – பிள்ளை உறங்காவில்லி தாசர் திருநட்சத்திரம். மேலும், இந்நன்னாளில், தேய்பிறை முடிந்து, வளர்பிறை தோன்றும் முதல் தினத்தன்று சந்திரன், வானில் பிரகாசிப்பதால், மேற்குத் திசையில் மாலைவேளையில் சூரியனின் அஸ்தமிக்கும் காலத்தில், சந்திரோதத்தைத் தரிசனம் செய்தால், அந்த நாள் தொடங்கி, அடுத்தமாதம் தொடங்கும் காலம் வரையில் வாழ்வில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். மேலும் எல்லாப் பிணிகளும் உங்களைக் கண்டால் விலகிடும். ஆயிரம் பிறைகளைக் காணும் பேறு பெறுவீர்கள் எனக் கட்டியம் கூறுகிறது, நவக்கிரக புராணம்.
மாசி 18 (2-3-2025) ஞாயிற்றுக்கிழமை – மணக்கால் நம்பிகள் திருநட்சத்திரம்.
மாசி 19 (3-3-2025) திங்கட்கிழமை – இன்று சித்த மகா புருஷர் ராமத்தேவரின் அவதார புண்ணிய தினம்.
மாசி 26 (10-3-2025) திங்கள்கிழமை – ஆமலிகா ஏகாதசி. இவ்விரதத்தின் மகாத்மியத்தைப் பற்றிக் கூறாத புராணங்களே இல்லை எனலாம். அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை. கங்கையை விட உயர்ந்த தீர்த்தமில்லை! காயத்ரி மகா மந்திரத்திற்கு இணையான மந்திரமில்லை!! என்பது ஆன்றோர் வாக்கு. ஏகாதசிக்கு முன் தினம் தசமியன்று எண்ணெய் ஸ்நானம் செய்து, ஒருவேளை மட்டுமே உணவருந்தி, மறுநாள் முழுவதும் உபவாசம் இருந்து, (உப + சமீப வாசம் = அதாவது இறைவனைப் பற்றிய சிந்தனையுடன்கூடிய உடல், மனத்தையும், இைறவனின் அருகாமையிலேயே நிலையிறுத்தல்), மறுநாள் காலையில் துவாதசியன்று வேதம் ஓதியோர்க்கு அன்னதானம் செய்வித்துவிட்டு பாரணை (உணவருந்த) வேண்டும். இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர்க்கு, முன்வினைப் பயன் அகலும், இந்த ஜென்மத்தில், அபிலாஷைகள் அனைத்தும் ஈடேறும். அனைத்துவித இக-பர சுகங்களை அனுபவித்து, மறுபிறவியில்லா, இறைவனின் இணையடி நிழலில் என்றென்றும் நீங்காது நித்வாஸம் புரிவர்.
மாசி 27 (11-3-2025) செவ்வாய்க்கிழமை – சுக்லபட்சம் பிரதோஷம். பிரதோஷ விரத மகிமை பற்றி அனைத்து புராணங்களிலும் சிலாகித்துக் கூறப்பட்டு்ள்ளது. இன்றைய தினத்தில் இரண்டாவது முறையாகக் குளித்து, பிரதோஷ காலமாகிய மாலை 5.30 மணிக்கு மேல், திருக்கோயிலுக்குச் சென்று, சாம்பசிவ மூர்த்தியை ரிஷபாரூடராக தரிசனம் செய்தால், ஸத் புத்திரர்களுடன்கூடிய சந்தானப்ராப்தி உண்டாவார்கள். கடன் தொல்லை நீங்கும். மனோவியாதி, உடல்பிணி நீங்கி, தீர்க்காயுளுடன், அனைத்து மனோரதங்களும் ஈடுடேறி, மனமுகந்த இல்வாழ்க்கை அமையும்.இந்த ஆண்டு “மாசி மகம்” என்னும் மகத்தான புண்ணிய தினம் 28-ந் தேதி (12-03-2025) புதன்கிழமையன்று நிகழ்கிறது! இப்புண்ணிய தினத்தில், தமிழகத்தின் புண்ணிய நதிகளான காவிரி மற்றும் தாமிரபரணி ஆகியவற்றில் நீராடுவது அனைத்து பாபங்களையும் போக்கி, நல்வாழ்வினையளிக்கும்.
மாசி 29 (13-3-2025) வியாழக்கிழமை ஹோலிப் பண்டிகை!
எப்போது பார்த்தாலும், திருக்கயிலை நாதனாகிய சிவ பெருமான் தவக்கோலத்திலேயே இருந்து வந்தது, இந்திராதி தேவர்களுக்கும், மகரிஷிகளுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எம்பெருமானை தரிசிப்பதற்காக, திருக்கயிலைக்கு எப்போது சென்றாலும், அவர்கள் வந்ததுகூட, தெரியாமல், தியானத்திலேயே லயித்து இருந்தது அவர்களுக்கு வருத்தத்தையளித்தது. அதனை மாற்றி, உலக இயல்பிற்கேற்ப அவரது மனதி்ல் சலனம் ஏற்படுத்துவதற்காக, மன்மதனை வேண்டினர்! அவரும், அவர்களின் வேண்டுகோளை எற்று, கடுந்தவத்திலிருந்த சிவபெருமான் மீது, காம உணர்ச்சிகளை ஏற்படுத்தும் மலர்க் கணைகளை ஏவி அவரது தவத்தைக் கலைக்க முற்பட்டார். கடுங்கோபத்துடன் தவம் கலைந்து, தனது நெற்றிக் கண்ணைத் திறந்த சிவபெருமானின் சீற்றத்தினால், எரிந்து, சாம்பலானான்! இதனைக் கண்ட மன்மதனின் தேவியான ரதி, துடிதுடித்து இறைவனின் பொற்பாதங்களில் விழுந்து வணங்கி கதறினாள். மனமிறங்கிய ஈசனும் மன்மதனை உயிர்ப்பித்து, அவளுக்கு மட்டும் அவன் உருவம் தெரியும்படி இருக்கும்படியாகவும் அருளினார். அத்தகைய புனித தினத்தை “ஹோலிப் பண்டிகை” எனவும், “காம தகன தினம்” -எனவும் பக்தியுடன் கடைபிடித்து வருகிறோம். மேலும், இன்றைய தினம் நாயன்மார் காரி நாயனார் பெருமானாரின் குருபூஜை. மேலும், இன்று பௌர்ணமி தினம். ஒருவரின் மனத்தை ஆட்டுவிப்பதாலே, சந்திரனை, “மனோகாரகர்” எனவும், “மாத்ருகாரகர்” எனவும் போற்றப்படுகிறார். இந்நன்னாட்களில் மனிதனின் மனம் புதிய கட்டுப்படுத்தமுடியாத உத்வேகத்தை அடையும். இச்சமயங்களில் மனத்தளவில் பாதிப்புக்குள்ளானோர், வேகத்துடன்கூடிய, விவேகமில்லாமல் நடந்துகொள்வது இயற்கை! நீரில் ஆதிபத்தியம் கொண்டுள்ளது சந்திரனாகையினால்தான் இந்நாட்களில் கடலலைகள் ஆர்ப்பரிக்கும். பெரு அலைகளுடன்கூடிய, சந்திரனின் பிரவேச நட்சத்திரத்தின் பெயரிலேயே அழைக்கப் பெறும். இன்று முழுவதும் உபவாசமிருந்து, மாலையில் முழு சந்திரனையும் தரிசித்து, வணங்கி, சத்திய நாராயண விரதம் கடைப்பிடித்தால், “அஷ்ட ஐஸ்வர்யங்களுடன்கூடிய, அபிலாஷைகள் அனைத்தையும் நிறைவேற்றித் தருவேன்” என ÿ சத்தியநாராயணனே சத்தியம் செய்து கொடுத்திருப்பதாக ÿகாந்த புராணம் அறுதியிட்டு, உறுதியுடன் கூறுகிறது. அதனால் மட்டுமே அத்தெய்வத்தை “ÿசத்திய நாராயணன்” எனக் கொண்டாடுகிறோம். இவ்விரதத்தை சித்ரா பௌர்ணமியன்று தொடங்குவது சாலச் சிறந்தது.
காரடையார் நோம்பு!
மாசி 30 (14-3-2025) வெள்ளிக்கிழமை – அரச குமாரியும், மகத்தான பதிவிரததையுமான, சாவித்திரி, அற்ப ஆயுள் கொண்டவன் எனத் தெரிந்திருந்தும், அரச குமாரனான சத்தியவானைத் திருமணம் செய்துகொண்டாள். பகைவர்களின் சூழ்ச்சியினால், நாடிழந்து, தன் தாய் – தந்தையுடன் காட்டில் வசித்து வந்தான். குறிப்பிட்ட நாளில், காட்டில் விறகு வெட்டி வருவதற்காகச் சென்ற, சத்தியவானின் உயிரை, எமதர்ம ராஜன் கவர்ந்து சென்றான். எமதர்மரைப் பின்தொடர்ந்து சென்ற சாவித்திரி, அவருடன் மன்றாடி, தன் கணவரின் உயிரை மீட்டாள். அதற்காக, தர்மராஜருக்கு, நன்றி தெரிவிக்க உபவாசமிருந்து, “காரடை” எனும் விசேஷ அடையை (பணியாரம்) செய்து, சமர்ப்பித்து, பூஜித்தாள். அதனால் தர்மராஜரும், உளம் மகிழ்ந்து, சத்தியவான் – சாவித்திரி ஆகிய இருவருக்கும், நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான வாழ்வையும் அளித்தருளினார்.கணவரின் ஆேராக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் விரும்பும் கற்புடைய நங்கையர் அனைவரும் அன்று முதல் “காரடையான் நோன்பு” எனப்படும் விரதமிருந்து, எமதர்மராஜரைப் பூஜித்து நல்வாழ்வு பெறும் புண்ணிய தினம் இன்று!மேலும், இன்றைய தினத்தில் மாலை கெளரி பூஜை (மாலை 5 மணி முதல் 6 மணிக்குள்ளாக முடித்து), சத்தியவான் சாவித்திரி கதையை படித்தாலோ, கேட்டாலோ, நினைத்தாலேயே மகத்தான புண்ணிய பலனை அடைவது திண்ணம்.இவற்றிலிருந்து, மாசி மாதத்தின் மகத்தான தெய்வீகப் பெருமைகளை அறிந்துகொள்ளலாம்.இனி, இம்மாதத்தின் ராசிப் பலன்களை மிகத் துல்லியமாக கணித்துக் கூறியுள்ளோம், “தினகரன்” வாசக அன்பர்கள் படித்து, உரிய – மிகச் சுலபமான பரிகாரங்களைச்
செய்து பயன்பெறவேண்டுமாய் பிரார்த்திக்கின்றோம்.
The post மனக்குறைகளை அகற்றும் மகத்தான மாசி மாதம்!! appeared first on Dinakaran.
