×

சமயபுரம் பகுதியில் அரசு விடுமுறை தினத்தில் மதுவிற்ற 2 வாலிபர் கைது

சமயபுரம், பிப்.13: தமிழக அரசு சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் என திருச்சி டிஐஜி வருண்குமார் உத்தரவின் கீழ், எஸ்பி செல்வ நாகரத்தினம் மேற்பார்வையில் திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிரடி ஆய்வு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று சமயபுரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள அகிலாண்டபுரம் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கோபால்(40) மற்றும் அப்பாதுறை பகுதியை சேர்ந்த செந்தில் (38) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால் கடந்த 10ம் தேதி சுமார் 250க்கும் மேற்பட்ட மதுபாட்டில் வாங்கி பதுக்கி வைத்து சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற சமயபுரம் போலீசார் மது பாட்டிலை விற்பனையில் ஈடுபட்டு வந்த கோபால் மற்றும் செந்திலை கையும் கழுவுமாக பிடித்து அவரிடம் இருந்த 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்து சமயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து சட்ட விரோதமாக மது பாட்டில் விற்பனையில் ஈடுபட்ட சம்பவம் குறித்து சமயபுரம் எஸ்ஐ இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்து திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சமயபுரம் பகுதியில் அரசு விடுமுறை தினத்தில் மதுவிற்ற 2 வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Trichy ,DIG ,Varunkumar ,Tamil Nadu government ,Trichy district ,SP Selva Nagaratnam… ,
× RELATED ரூ.1.17 கோடி கஞ்சா திரவம் பறிமுதல்